Skip to content

அரேபியன் கார்டன் கடல்உணவு உணவகம்

செப்டம்பர் 15 2021

ஒரு நீண்ட தூரம் காரில் பயணம் செய்யலாம் என்று நினைத்து, நான், என் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் புதுச்சேரியிலிருந்து மகாபலிபுரத்திற்க்கு காரில் ஞாயிற்றுக்கிழமை (22/08/2021) காலை சுமார் 11 மணியளவில் எங்கள் பயணம் தொடங்கியது. இந்த பயணத்தின் நோக்கம் ஒரு நீண்ட தூரம் காரில் பயணிப்பது என்பது தான். மிகவும் மகிழ்ச்சியாக கடற்கரை சாலையில் இளையராஜா பாடலுடன் எங்கள் பயணத்தை இனிதே தொடங்கினோம்.

சிறந்த கடல் உணவு உள்ள உணவகத்தில் இன்று மதியம் சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு முக்கிய காரணம், நசிம் தான். அவனுக்கு கடல் உணவு என்றால் மிகவும் பிடிக்கும், அதிலும் குறிப்பாக கடல் இறால் என்றால் சொல்லவே வேண்டாம். என்னுடைய தேர்வாக மகாபலிபுரத்தில் உள்ள அரேபியன் கார்டன் உணவுகத்துக்கு செல்வது என்று முடிவு செய்து, மதியம் சுமார் 1 மணியளவில் உணவகத்திற்க்கு சென்று அடைந்தோம்.

அரை மணிநேரம் காத்திருப்புக்கு பிறகு நான்கு பேர் அமர்வதுற்கு இடம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இடம் கிடைப்பதில் சிரமம் இருந்தது. எனினும் எங்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

அரேபியன் கார்டன் உணவகத்தில் எந்த கடல் உணவு பிரசித்து பெற்றது என்பதனை உணவு பரிமாறுபவரிடம் விசாரித்து அவருடைய ஆலோசனையை கேட்டு வாங்கினோம். அவருடைய ஆலோசனை படி, பெரிய இறால் (Jambo Prawns 99), மீன் வருவல் (Fish Finger), முழு மீன் வருவல் (Full Fish), நண்டு (Samba Crab) ஆகியவைகளை வாங்கி ருசித்தோம். அதில், பெரிய இறால் மற்றும் முழு மீன் வறுவல் மிகவும் அருமையாகவும், ருசியாகவும் இருந்தது. அதிலும் நாங்கள் வாங்கிய அனைத்து கடல் உணவுகளும் புதியதாக இருந்தது என்பது கூடுதல் சிறப்பு. பிறகு இறால் பிரியாணி மற்றும் மீன் குழம்புடன் சாப்பாடு வாங்கி நால்வரும் பகிர்ந்து சாப்பிட்டோம்.

முழு நிறைவு பெற்ற மதிய உணவாக அமைந்ததில் எங்களுக்கு முழு திருப்தி.

MyNaturalGraphy மதிப்பீடு
Advertisements

மகாபலிபுரம் கடற்கரை மற்றும் அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று சிறிது நேரம் சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து மாலை சுமார் 4 மணியலவில் புதுச்சேரிக்கு புறப்பட்டோம்.

வரும் வழியில் டீ இடைவேளை (Tea break) எடுக்கிறோம் என்று ஐஸ்கிரீம் இடைவேளையாக (Ice cream break) மாறியது என்பது தனிக் கதை. இப்படியாக ஒரு நாள் முழு திருப்தியுடன் மற்றும் புத்துணர்ச்சியுடனும் இனிதே எங்கள் பயணம் நிறைவடைந்தது.

நன்றி, அடுத்து இன்னொரு (உணவு) பயணத்தில் சந்திப்போம்…

3 Comments »

  1. குடும்பமாக சென்று உணவு சாப்பிடுவதே ஒரு தனி இன்பம் அதிலும் அறுசுவையான உணவு உண்பது கூடுதல் சிறப்பு…
    உணவை பார்க்கும் போதே சுவைக்க தூண்டுகிறது… பகிர்வுக்கு நன்றி!

    Liked by 2 people

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: