மாற வேண்டியது மனிதன் இல்லை, காட்டில் வசிக்கும் விலங்குகள் தான்!

காட்டில் இருக்கும் புலியை (T-23) சுட்டு பிடிக்க (வேட்டையாட) உத்தரவு
நாம் (மனிதர்கள்) வசிக்கும் இடங்களில் குரங்குகள் அதிகமாக இருந்தால் அதனை அரசு கவனத்துக்கு கொண்டு சென்று, அவைகளை பிடித்து அருகேயுள்ள காட்டில் விடுகிறோம். ஏன் என்றால்? நாம் (மனிதர்கள்) வசிக்கும் இடங்களில் காட்டில் வசிக்க வேண்டிய விலங்குகளுக்கு என்ன வேலை என்பதினால். இதனையே காட்டில் வசிக்கும் விலங்குகள் நம்மிடம் கேட்டால், நம்மிடம் பதில் இல்லை.
விலங்குகள் மற்றும் பூர்வகுடிகள் வசிக்கும் இடம் காடு. (காடுகளிலும், அங்கிருக்கும் விலங்குடனனும் எப்படி வாழ்வது என்பது பூர்வகுடிகளுக்கு தெரியும்). காடுகளில் மக்களாகிய நமக்கு என்ன வேலை என்று நம்முடைய ஆறாவது அறிவு சொல்லுகிறது, ஆனால் நம்முடைய ஆசைகள் அதனை ஏற்க மறுக்கிறது.
அண்மை காலங்களில், மனிதர்களாகிய நமக்கும், காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கான காரணம், காடுகளை நமக்கான இடமாக மாற்றிக் கொண்டே இருப்பதுதான். இவற்றின் காரணமாக காடுகளின் நிலப்பரப்பு குறைந்து, காட்டு விலங்கின் எல்லைகள் சுருங்கி, தனக்கான உணவைத் தேடி தன்னுடைய எல்லையை விட்டு வெளியே வரவேண்டிய கட்டயாம் விலங்குகளுக்கு ஏற்படுகிறது. அப்படி வரும் விலங்கினை பார்த்து அட்டகாசம், ஆட்டூழியம் செய்கிறது என்று எந்த ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கதறுகிறோம். பாவம் காட்டில் இருக்கம் விலங்குகள்.
மாற வேண்டியது காட்டில் வசிக்கும் விலங்குகளாகிய நீங்கள் தான்
பல நூற்றாண்டாக காட்டில் வசிக்கும் நீங்கள், எங்களை (மனிதர்களை) போன்று வளர்ச்சியடையவில்லை என்பதனால் தான் உங்களுக்கு இந்த நிலைமை. நீங்கள் எங்களைப் பார்த்து கொஞ்சமாவது மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் உங்களுக்கு இந்த நிலைமைதான் தொடரும்.
ஆகையினால் உடனே கிழேயுள்ள ஐந்து அறிவுரையை கேட்டு அதனை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.



5 முக்கிய அறிவுரைகள்
முதலில், தனித்தனி குடும்பமாக இல்லாமல், உங்கள் குடும்பங்களை ஒன்றிணைத்து ஒரு சமுதாயமாக மாற்றுங்கள். உதாரணத்துக்கு புலிகள் சமுதாயம், யானைகள் சமுதாயம், சிங்கம் சமுதாயம் என்று. உங்களுக்கு மக்களினால் ஏற்படும் பிரச்சனைக்கு எதிர்த்து போராடுவதற்க்கு வசதியாக இருக்கும்.
இரண்டாவது, உங்களுக்கு என்று கட்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள், உதாரணத்திற்கு, ஊட்டி காடு வளர்ச்சி கட்சி, தென்னிந்திய காடுகள் முன்னேற்றக் கட்சி, ஒரே காடு – ஒரே சமுதாயம் கட்சி என்று. இப்படியான கட்சி அமைப்புகள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். இப்போழுது புலி (T-23) க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை நீங்கள் ஒன்றிணைந்து எதிர்க்கலாம். உங்களிடம் இருக்கும் கட்சிகள், இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
மூன்றாவது, உங்களுக்குள் இருக்கும் கட்சிக்கு என்று தலைவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான், உங்கள் நிலப்பரப்பை முதலில் பாதுகாத்து, பிறகு மக்களிடம் இருக்கும் நிலப்பரப்பையும் ஆக்கிரமிப்பு செய்யலாம்.
நான்காவது, அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி, உங்களுக்கு என்று ஒரு ஆட்சியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான், மக்களாகிய நாங்கள் உங்கள் இடத்துக்கு வந்து உங்களிடம் பிரச்சனைகள் செய்தால், நீங்கள் ஒன்றுகூடி எதிர்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
கடைசியாக, உங்களுக்கு என்று ஐந்தாவது அல்லது பத்தாவது திட்டத்தை வகுத்துக் கொண்டு முன்னேறுங்கள். அப்போதுதான் மனிதர்களையும் அவர்களின் இடங்களையும் அழித்து இந்த உலகம் முழுவதும் உங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டுவர முடியும்.
Yes. It’s really true. Nice topic 👍
LikeLiked by 1 person