நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்!

“அன்புள்ள மேரி அவர்களுக்கு, வணக்கம்.
தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது.
குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து
உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக,
உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை
நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.
நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல,
தூய்மையான பணியாளர்.
உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை
என்பதற்கு நீங்கள் சான்று. வாழ்த்துகள்”
வெ.இறையன்பு
தமிழ்நாடு தலைமைச் செயலாளர்