ரமலான் 2022 – முஸ்லிம்களுக்கு ரமலான ஏன் மிகவும் முக்கியமானது?
உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் மாதம், புனித மாதமாகும். இந்த மாதத்தில் தான், புனித நூலான குர்ஆன் அருளப்பட்டது.
ரமலான் மாதம்
ரமலான் மாதம், முஸ்லிம்களின் சந்திர நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இந்த மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் நோன்பு என்கின்ற விரதத்தை கடைபிடிப்பார்கள். சூரியன் உதயமாகுவதற்க்கு முன் (ஸகர்) மற்றும் சூரியன் அஸ்தமிக்கும் (இப்தார்) வரை நோன்பு வைப்பார்கள்.
அதிகமான தொழுகை, குர்ஆன் ஓதுதல் மற்றும் தன்னால் முடிந்த அளவுக்கு அதிகமான பணம் மற்றும் பொருள் உதவிகளை ஏழைகளுக்கு கொடுப்பது போன்ற பிற வழிபாட்டுச் செயல்களும் இந்த புனித மாதத்தில் ஊக்குவிக்கப்படுகின்றது.
ஏன் நோன்பு
நோன்பு, இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். இது முதிர்ச்சியடைந்த மற்றும் ஆரோக்கியமான அனைத்து முஸ்லிம்களுக்கும் முழு நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று குர்ஆனில் வசனம் உள்ளது. ஆகவே, நோன்பு நோற்பது ஒரு வழிபாட்டுச் செயலாகும்.
நோன்பு நமக்கு பொறுமையைக் கற்றுக்கொள்வதற்கும், கெட்ட பழக்கங்களை உடைப்பதற்கும் உதவுகின்றது.
இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்:
1. கலிமா (ஈமான்)
2. தொழுகை
3. ஜக்காத்
4. நோன்பு
5. ஹஜ்
ஈதுல் பித்ர் (Festival of Breaking Fast)
சந்திர நாட்காட்டியின் படி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு கடைபிடிக்கப்படும். 29ஆம் நாள் இரவில் சந்திரனைப் பார்க்கவில்லை என்றால், ரமலான் முழு 30 நாட்களுக்கு நீடிக்கும்.
ரமலான் மாதம் முடிவில் (சந்திரன் வானத்தில் தென்படும் போது) ‘ஈதுல் பித்ர்’ கொண்டாடப்படுகிறது மற்றும் நோன்பு நோற்க போதுமான வலிமையை கொடுத்த அல்லாஹ்வுக்கு இந்த நாளில் நன்றி கூறுகின்றனர். இந்த நாள், முஸ்லிகள் அனைவரும் ஒரு பெரிய கொண்டாட்டமாகும்.
இந்த வருடம் (2022), வரும் ஞாயிறுக்கிழமை (நாளை – 03/04/2022) ரமலான் தொடங்குகிறது.
தாஜூதீன்